Free counter NEWS FX CASINO LATEST NEWS Foxybingo

செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

ஏன் இப்படி?..........

மிக நல்ல திறமை இருக்கிறது.........லட்சக்கணக்கானோர் பாராட்டி விட்டார்கள், பாராட்டுகிறார்கள், பாராட்டுவார்கள்!...........
இவர் படம் தாங்கிய எல்லாவற்றுக்கும்/எவற்றுக்கும் ஒரு சிறப்பு மரியாதை இருக்கும்!........
இவர் தயவால் புகழும் பணமும் அடைந்தவர்கள் ஏராளம்!....
இருபது வருட காலம் ஒரு சாம்ராஜ்யமே நடத்தியவர்.................
எல்லாம் இருக்கிறது.........ஆனால்..............இன்னும் இவருக்கு ஏனோ உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை!......
இவருக்கு சமமான இவருக்குப் பின் வந்த ஒருவருக்கு அந்த உலக அங்கீகாரம் கிடைக்கும் போது இவர் மனம் என்ன நினைத்திருக்கும்...........?
உள்ளம் நிச்சயம் கொஞ்சமாவது பொறாமைப் பட்டிருக்கும்.......கண்ணீர் சிந்தியிருக்கும் ..... ! கோபம் கொண்டிருக்கும்.........!
அப்படி செய்வது நிச்சயம் சரியே........அந்த நிலையில் இருப்பவருக்கே அந்த வலியும் வேதனையும் புரியும்!..............
வேடிக்கை பார்க்கும் நமக்கு தான் அது செய்தியே தவிர அந்த இதயத்துக்கு அல்ல!..
துன்பம் வரும் வேளைகளில் வள்ளுவன் சொன்னதை போல் நாங்கள் சிரித்ததில்லை ஆனால் உன் பாட்டைக் கேட்டிருக்கிறோம்!..உனக்கே அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டது!.......
உன் இசையை உச்சரிக்கும் உதடுகள் இருக்கும் வரையில் உனக்கு மரணமில்லை!....வெள்ளைக்காரன் தராவிட்டால் என்ன........உன் தமிழன் நாங்கள் தருகிறோம் 1000 ஆஸ்கார்கள்......!

இசை ஞானியே..................ஓங்கட்டும் உனது புகழ்!.........


செவ்வாய், 23 டிசம்பர், 2008

எச்சரிக்கை: கவிதை!

ஆண்டவா அடுத்த பிறவியில்

குபேரனாய் என்னை படைக்கா விட்டாலும்

குறைந்தது அமைச்சரின்

பேரனாகவாவது படை.!

எச்சரிக்கை:( இதை கவிதை என்று ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு இந்த வரம் கிடைக்காது!)

திங்கள், 22 டிசம்பர், 2008

இரண்டு கைகள் ஒன்றானால்........................

அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் முதல் வணக்கம்!
வலைப்பூக்களில் இதுவரை நீங்கள் குடுத்த தேனை மட்டுமே குடித்து வந்த நான் இப்போது தேன் குடித்த தைரியத்தில் நானும் தேன் தரப் புறப்பட்டிருக்கிறேன்.
வலைப் பூத் தெருக்களில் நடை பழகும் இக் குழந்தைக்கு கரம் கொடுத்து உதவுங்கள்.
செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்........