Free counter NEWS FX CASINO LATEST NEWS Foxybingo

சனி, 15 மே, 2010

அக்ஷய திரிதியை அன்னைக்கி தங்கம் வாங்குனா ரொம்ப நல்லது!

அக்ஷய திரிதியை அன்னைக்கி தங்கம் வாங்குனா ரொம்ப நல்லதாம்!....அதுலயும் வெண் தங்கம் பிளாட்டினம் வாங்குனா ரொம்ப ரொம்ப நல்லதாம்!....டி.வி.க்கள் ,பத்திரிக்கைகள் எல்லாம் அலறுது!.....அன்னைக்கி தங்கம் வாங்குறவங்க அந்த வருஷம் பூரா வாங்கிட்டே இருப்பாங்களாம்!.....அன்னைக்கி தங்கம் வாங்கினா செய்கூலி இல்ல, சேதாரம் இல்ல,தங்க நாணயம் இலவசம் வேற!...அடப் பாவிங்களா உங்க மூடத் தனத்துக்கு ஒரு அளவே இல்லியாடா?.....

பல ஜோசியர்கள் இதுக்கு கியாரண்டீ வேற குடுக்குறாங்க!...தயவு செஞ்சு வாங்குங்கன்னு கெஞ்சுறாங்க!..எல்லாம் நம்ம மக்கள் நல்லா இருக்கணும்ங்கிற நல்லெண்ணம் தான்!...ஒரு 100 வருஷத்துக்கு முன்னால கல்வி,ஜோதிடம் இதெல்லாம் தொழில் கிடையாது!ஒரு பையன் படிக்கணுன்னா வாத்தியார் வீட்ல போய் தங்கித் தான் படிக்கணும்!நோ ஃபீஸ்!ஆனா அதுக்குப் பதிலா குருவோட வீட்ல எல்லா வேலையும் செய்யனும்!..பையன் தேறிட்டான்னு வாத்தியார் நினைச்சா பையனோட அப்பாவுக்கு தாக்கல் அனுப்புவாரு!..அவரும் வந்து ஏதோ தன்னால் முடிஞ்சதை தட்சணைன்னு சொல்லிக் குடுத்துட்டு தன் பையனைக் கூட்டிக்கிட்டுப் போவாரு!

அதே போலத் தான் ஜோதிடமும்!..ஜோசியர் இவ்வளவு வேணும்,அவ்வளவு வேணும்னு யார்கிட்டயும் கேக்க மாட்டாரு!..பாக்க வற்றவங்க குடுக்குறதை சந்தோஷமா வாங்கிக்குவாரு!...ஆனா இப்போ?.........ஜோதிடர், வீட்ல போர்டே வச்சிருக்காரு ஹோட்டல் ரேஞ்சுக்கு!....திருமணப் பொருத்தம் பார்க்க...ஜாதகம் கணிக்க,பலன் சொல்லன்னு ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு ரேட்!...பரிகாரப் பூஜை பண்றேன்ணு இவனுங்க அடிக்கிறானுங்க பாருங்க ஒரு கொள்ளை!.......தெஹல்காவுக்கே சவால் தான்!....இவனுங்க கழுத்துல பாத்தீங்கன்னா ருத்ராக்ஷம்,துளசி,ஸ்படிகம்னு எல்லா ரகத்துலயும்,எல்லா டிசைன்லயும் ஒரு மாலைப் போட்ருப்பாங்க!...அப்பத் தான் நம்ம நம்புவோமாம்!.....

கடவுளை நம்பலாம்!....ஆனால் நான் தான் கடவுள் என்பவனை நம்பக் கூடாது!...
போலவே,ஜோதிடத்தைக் கூட நம்பி விடலாம்!..ஆனால் நான் தான் ஜோதிடன் என்கிறார்களே இவர்களை மட்டும் தயவு செய்து நம்பி விடாதீர்கள்!...

ஆகவே அக்ஷய திரிதியை என்பது ஒரு நல்ல நாள் அவ்வளவு தான்!..அன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதெல்லாம் வியாபாரிகள் அவிழ்த்துவிட்ட கட்டுக் கதை!...அவ்வளவே!..

7 கருத்துகள்:

rkajendran2 சொன்னது…

ஆகவே அக்ஷய திரிதியை என்பது ஒரு நல்ல நாள் அவ்வளவு தான்!..அன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதெல்லாம் வியாபாரிகள் அவிழ்த்துவிட்ட கட்டுக் கதை!...அவ்வளவே!..
=======================
மிகவும் அருமையான கருத்து. சபாஷ்

நேசன்..., சொன்னது…

நன்றி கஜேந்திரன்!...

நாடோடி சொன்னது…

ரெம்ப‌ நாள் க‌ழிச்சி திரும்ப‌ எழுதுறீங்க‌ என்று நினைக்கிறேன்... தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்.. நான் எழுத‌ ஆர‌ம்பித்த‌போது வ‌ந்து பின்னூட்ட‌ம் போட்டு மொபைல் எண் கொடுத்தீர்க‌ள்.. ஞாப‌க‌ம் இருக்கும் என்று நினைக்கிறேன்... ப‌ல‌ மூட‌ ந‌‌ம்பிக்கைக‌ளில் இதுவும் ஒன்று..

நாடோடி சொன்னது…

அந்த‌ "சொல் சரிபார்ப்பு"-யை தூக்கி விடுங்க‌ள்.. அப்ப‌தான் சுல‌ப‌மாக‌ பின்னூட்ட‌ம் போட‌ முடியும்..

நேசன்..., சொன்னது…

வாங்க நாடோடி!..உங்கள மறக்க முடியுமா?...நீங்க சொன்னதைப் போலவே சொல் சரிபார்ப்பு ஆப்சனைத் தூக்கியாச்சு!...இனிமே அடிக்கடி எழுத முயற்சி பண்றேன்!...

HVL சொன்னது…

//அக்ஷய திரிதியை அன்னைக்கி தங்கம் வாங்குனா ரொம்ப நல்லதாம்//

யாராவது சும்மா கொடுத்தா மட்டும் தான் நாங்க வாங்குவோம்!

//
அக்ஷய திரிதியை என்பது ஒரு நல்ல நாள் அவ்வளவு தான்!..அன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதெல்லாம் வியாபாரிகள் அவிழ்த்துவிட்ட கட்டுக் கதை!//

100% உண்மை!

goma சொன்னது…

http://haasya-rasam.blogspot.com/2010/05/blog-post_18.html

இந்த லின்க் பாருங்களேன் அக்‌ஷயதிரிதி..நார் நாராக் கிழிச்சிருக்கேன்