இன்றைக்கு அம்மாக்கள் தினமாம்!....அதுவும் சரி தான்!இதை சாக்காக வைத்தாவது நம் அம்மாவுக்கு ஏதேனும் செய்யலாமே!சின்னதாய் தாங்க்ஸ் சொன்னாலே போதுமே அவள் குளிர்ந்து போவாளே!..
கருவுற்றிருக்கும் போது என் மனைவியை அருகிலிருந்து பார்த்தவன் என்பதால் ஒரு தாயின் வேதனைகளும் வலிகளும் எனக்கு மிக நன்றாகவே தெரியும்!...நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு உணவகத்தில சாப்பிட்டிக் கொண்டிருந்தேன்!என் பக்கத்தில் கனவன்,மனைவி அவர் தம் 2 வயது குழந்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்!..குழந்தைக்காக இட்லியும்,அவர்களுக்கு பூரியும் தோசையும் ஆர்டர் செய்து அதுவும் வந்து விட்டது!..ஆனால் அந்தக் குழந்தை இட்லியை சாப்பிடுவதற்குள் அவர்களைப் படுத்திய பாடு இருக்கிறதே?....அழுது,தன்ணீர் டம்ளரைத் தள்ளி விட்டு,வாயில் உள்ளதை அம்மாவின் மேல் துப்பி என ரகளை தர்பாரே நடத்தி விட்டது!...ஆனால் அந்தத் தாய் குழந்தை சாப்பிட்ட பின்னரே சாப்பிட்டார்!..தன் குழந்தை பசியோடு இருக்கையில் ஒரு தாய் உண்ண மாட்டாள் என்பதை நான் உணர்ந்து கொண்ட தருணம் அது!....
என்னை விட 5 வயது மூத்த என் நண்பர் மனைவி பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் இருக்கும் போது அவர் அடைந்த டென்ஷனையும்,பின் குழந்தை பிறந்ததும் அடைந்த இன்பத்தையும் கண்ட போது என் பெற்றோர்கள் மீது அளப்பறிய ஒரு உணர்வு ஏற்பட்டது!...அப்போது ஒரு முடிவெடுத்தேன் என் பெற்றோர்கள் அவமானப் படும் படியாகவோ,தலை குனியும் படியாகவோ எந்த ஒரு செயலையும் செய்யக் கூடதென!...முடிந்த வரை அவர்கள் மனம் மகிழ்வுறும் வண்ணமே நடந்து வருகிறேன்!...என் அப்பாவுக்குக் காதல்,கலப்புத் திருமணம் என்றாலே பிடிக்காது!..இதற்காகவே என்னைத் தேடி வந்த இரு காதல்களை வேண்டாம் என்றிருக்கிறேன்!...எனக்கு என் பெற்றோர்கள் தான் முக்கியம் என் காதல் அல்ல!....
ஆனால் எனக்கு என் அம்மாவின் மேல் ஒரு சிறு வருத்தம் உண்டு!...அவளுக்கு சேமிப்பு,திட்டமிடுதல்,சொத்து சேர்த்தல் என்பதெல்லாம் தெரியாது!...அதனால் எங்களுக்கும் சொல்லித் தரவில்லை.எங்கள் அப்பா நிறைய சம்பாதித்தது போல் இருக்கிறது!...ஆனால் சொத்து என்று எதுவும் இல்லை.காரணம் என் தாய் என்பேன்!...
சேத்த பணத்தை சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
செலவு பண்ண பக்குவமா அம்மா கையில கொடுத்துப்
போடு செல்லக்கண்ணு! - அவ ஆறை நூறு ஆக்குவாடா சின்னக்கண்ணு!
என்ற வாக்கு என் தாயிடம் செல்லாது!.....ஆறை நூறாக்க வேண்டாம் பத்தாகக் கூட ஆக்கத் தெரியாது அவ்வளவு வெகுளி!இன்றும் அப்படித் தான் இருக்கிறாள்!என் மனைவியும் இதைத் தான் சொன்னாள்!...அதை என் அம்மாவிடமும் சொல்லி விட்டாள்!.....அதற்கு என் அம்மா,ஆமாண்டி எங்க அம்மா என்னை அப்படி வளத்துட்டாங்க என்றிருக்கிறார்!..என்ன சொல்ல?....
ஆனாலும் எனக்கு என் அம்மாவை ரொம்பப் பிடிக்கும்!.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக