ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு Ignorance is bliss என.அது மிகச் சரி என அடிக்கடி நான் உணர்கிறேன்.
நிறைய்யப் படித்து,நிறைய்ய யோசித்துக் கஷ்டப்பட்டு,கஷ்டப்படுத்தி கொண்டு இருப்பவர்களை விட படிக்கவே படிக்காத குறிப்பிட்ட எல்ல்லையை தாண்டி யோசிக்காத மனிதர்கள் தான் மிக மிக சந்தோசமாக இருக்கிறார்கள் என்பது என் எண்ணம்.
இவர்கள் எல்லாம் ஒரு படம் பார்த்தோமா,விசில் அடித்தோமா,ஆடினோமா,வீட்டுக்கு வந்தோமா,அடுத்த வேலையைப் பார்த்தோமா என ஒழுங்காக இருக்கிறார்கள்.என்னைக் கேட்டால் இவர்கள் தான் உண்மையான ரசிகர்கள்.இவர்களால் தான் இன்னமும் திரையுலகம் ஜீவித்துக் கொண்டிருக்கிறது.திரையுலகமும் இவர்களை நம்பித் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அறிவுஜீவிகள் என நம்புபவர்கள்,தான் சினிமாவுக்குப் போகும்போது டிக்கெட்டோடு பெரிய பூதக்கண்ணாடியும் கொண்டு சென்று எத்தனை ஓட்டை இருக்கிறது,ஒடிசல் இருக்கிறது எனக் கணக்கிட்டு வீட்டிற்கு வந்ததும் அதை வெளியே ஊர் பூராவும் சொல்லி " பாத்தியா எனக்கு எவ்வளோ அறிவு இருக்கு " எனக் காண்பித்து சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.இவர்கள் எல்லாம் எப்படி சாப்பிடுகிறார்கள் எனத் தெரியவில்லை.சாப்பாட்டில் கூட இந்த மிளகு கம்யுனிசம் பேசும் கேரளா,இந்தப் பருப்பு ஆந்திரா என ரிஷிமூலம்,நதிமூலம் எல்லாம் பார்த்து நோண்டி நுங்கடுத்துத்தான் சாப்பிடுவார்களோ?.........
இப்படி சாப்பிட்டால் அந்த உணவின் ருசியை எப்படி உணர முடியும் அனுபவிக்க முடியும்?..........சாப்பிட்டு முடித்ததும் உப்போ,புளிப்போ,காரமோ எது சரி இல்லையோ அதை சரியாய் சொல்வதை விட்டு விட்டு சமையல்காரரின் பூர்வீகம்,மளிகை வாங்கிய கடையின் நிலை,என ஏதேதோ உளறி..........அடப் போங்கய்யா என ஆகிவிடுகிறது.
ஒரு படத்தில் சொல்வதை போல........."பழமொழி சொன்னா ரசிக்கணும் ஆராயக் கூடாது!"..............அதே தான் ஒரு திரைப்படத்திற்கும்.
5 கருத்துகள்:
தல... என்னைய பொறுத்த வரைக்கும் ஒரு படத்த திரைப்பட மொழியில விமர்சிக்கணும்.. அத விட்டுட்டு அவங்களே யோசிக்காததயெல்லாம் யோசிச்சி மண்டைய கொடயிரது தேவை இல்லாதது...
இங்க ஒரே படத்துனால எதுவும் கெட்டும் போக போறது இல்ல.. நல்லாவும் ஆகிட போறது இல்ல... அது பொழுதுபோக்கு.. அவ்ளோ தான்..
வருகைக்கு நன்றி கனகு!........
வருகைக்கு நன்றி கனகு!........
நேசன்.
இடுகை நல்லா இருக்குது. ரசிச்சேன். ஆனா ஆராயலை!
தங்களின் முதல் வருகைக்கு ரொம்ப நன்றி ஜி!.....அடிக்கடி வாங்க!...
கருத்துரையிடுக