எனக்கென்னமோ இந்தப் படத்தைப் பார்த்ததும் முதலில் தோன்றியது மணி எதற்கு இந்தப் படத்திற்கு ராவணன் எனப் பெயர் வைத்தார் என்பது தான்!அப்படி வைக்காமல் விட்டிருந்தால் மக்களிடம் நிலவும் தேவையற்ற எதிர்பார்ப்பைக் கொஞ்சமாவது குறைத்திருக்கும்.இந்தப் படமும் வெற்றியை ருசித்திருக்கும்!....
தியேட்டரில் விபீஷணண்டா,கும்பகர்ணண்டா,சூர்ப்பனகைடி போன்ற குரல்கள் கேட்டுக் கொண்டே இருந்தது!.......கார்த்திக்கை அனுமார் ஆக்கியதற்காக மணிக்கு ஸ்பெஷல் திட்டும் விழுந்தது!.....
எதிர்பார்த்ததைப் போலவே அல்லது வழக்கம் போலவே அரையிருட்டு, சட்டென்று விளங்கிக் கொள்ள இயலாத சுருக்கமான வசனங்கள்,கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போன்ற ஒளிப்பதிவு,வித்தியாசமான இந்திய லொக்கேஷன்கள் இதிலும் இருக்கிறது ஆனால் இன்னும் சிறப்பாக.
படம் முழுக்கப் பச்சை மரங்கள் சூழ்ந்த,அருவிகள்,ஓடைகள் நடை பயிலும் இடங்கள் என்பதாலோ என்னவோ தியேட்டரில் ஏ.சி.யைப் பாதியில் நிறுத்தியும் யாருக்கும் அது தெரியவுமில்லை,வேர்க்கவுமில்லை.
விக்ரம் இன்னும் கந்தசாமியின் தோல்வியிலிருந்து மீளவில்லை போல.கோழி சவுண்ட் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.அவர் பக் பக் என்னும் போதெல்லாம் நமக்கு நஞ்சம் பக் பக் என்கிறது!..( கந்தசாமி இன்னொருவாட்டியா என்று)அதிகம் சொல்ல ஒன்றுமில்லை!.
ஐஸ்......அங்கே இங்கே தாவி,விழுந்து,அழுது,ஏங்கி என நடிக்க என்னென்னவோ செய்கிறார்!நமக்குத் தான் பாவமாய் இருக்கிறது!.....இந்த அழகான பெண்ணிற்கு இவ்வளவு சோதனையா என!....
பிருத்விராஜ்.....இவரைத் திரையில் காட்டியதும் 11 பேர் கை தட்டினார்கள் யார்ரா என்று பார்த்தால் எல்லாம் மலையாளிகள்!.....மொழிப்பற்றாம்..நல்லா இருங்கடே!....(ஐஸைப் பார்த்து எந்தக் கன்னட ரசிகரும் கை தட்டவில்லை!..அவர்களுக்கு தண்ணியில் இருக்கும் மொழிப் பற்று கன்னியில் இல்லை போல!........)மணி சொன்னதைச் செய்திருக்கிறார் போல!...நன்றாகக் கத்துகிறார்!..மனைவியை சந்தேகப்படுகிறார்..கிளைமாக்சில் ஐஸை அணைத்துக் கொண்டு கேமராவைப் பார்த்துக் கொண்டு போஸ் கொடுப்பார் என நினைத்தேன்! ப்ச்..ஏமாற்றிவிட்டார்!..
பிரபு!......வயது, உருவத்திற்கேற்ப நல்ல வேடங்களாய் செய்து கொண்டிருக்கிறார் என எல்லோரும் சொன்னதற்கு இந்தப் படம் ஒரு திருஷ்டிப்பொட்டு!...
இந்தப் படத்தில் முக்கியமாய் எனக்குத் தோன்றியது உடைகள்!......காட்சிகளிீன் சூழ்நிலைக்கேற்ப மிகச் சரியாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது!......அதிலும் கிளைமாக்சில் ஐஸ் அணிந்திருக்கும் அந்த வெள்ளை ஆடை....அட!.......
சுருக்கமாய் சொல்லப் போனால்....ஆய்தஎழுத்து,குரு வரிசையில் மணிக்கு தமிழில் இன்னொரு.....வெற்றியை நழுவ விட்டப் படம்!
6 கருத்துகள்:
ரெம்ப நாளைக்கு அப்புறம் அடுத்த பதிவு... அதுவும் ராவணன் விமர்சனம்... நல்லா இருக்குங்க..
நாடோடி!.ரொம்ப நன்றி!
வணக்கம் அண்ணன்...
நலம்... நலம் அறிய அவா....
அப்போ படம் மொக்கையா? சுத்தம்...
மணி கண்டன் & சந்தோஷ் சிவன் Cinematography நல்லா இருக்கு என்று நீங்க உட்பட பரவலாக எல்லோரும் சொல்றீங்க...
அதுக்கு ஆச்சு பார்க்க போறேன் அண்ணன்...
மீண்டும் சந்திக்கலாம்...
என்றும் உங்கள் அருண் பிரசங்கி
போய்ப் பாரு!...போகும்போது தியேட்டர்ல ஏசி ஆப் பண்ணிடக் கூடாதுன்னு சுடல மாடனுக்கு வேண்டிக்கிட்டு போ!.....
andha game-kku naan pogala...
alai vidunga saami :)
n
கருத்துரையிடுக